கற்றது கைமண்ணளவு ..... ( சிறுகதை )
கற்றது கைமண்ணளவு ....... (சிறுகதை)
ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்...
தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை....
அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!
"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,
"என்ன மாதிரி கேள்விகள்"..?
என்று சிறுமி கேட்டாள்.!!
"கடவுள் பற்றியது"...!!
ஆனால்...,
💛கடவுள்,
💛நரகம்,
💛சொர்க்கம்,
💛புண்ணியம்,
💛பாவம் என
எதுவும் கிடையாது..!!
"உடலோடு இருக்கும் வரை உயிர் "..!!
"இறந்த பிறகு என்ன"..?
"தெரியுமா" என்றார்.!!
அந்த சிறுமி யோசித்து விட்டு... ,
"நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"..? என்றாள்.
"ஓ எஸ்..!
தாராளமாக கேட்கலாம்"..என்றார்....!!
"ஒரே மாதிரி புல்லை தான்..,
🏵 பசு,
🏵மான்,
🏵 குதிரை
உணவாக எடுத்துக் கொள்கிறது..!!
ஆனால், வெளிவரும் 'கழிவு'..( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது"...!!!
"பசுவிற்கு சாணமாகவும்",,,
"மானுக்கு சிறு உருண்டையாகவும்"...
"குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது"..!!
'ஏன் அப்படி'.?
என்று கேட்டாள்.
'தத்துவவாதி'.
இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை...!!
திகைத்துவிட்டார்'..!!!
"தெரியவில்லையே"..
என்று கூறினார்....!!
"கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான..
"'உணவு கழிவு பற்றிய ஞானமே'.. நம்மிடம் இல்லாத போது..
பின் ஏன் நீங்கள்
💜கடவுள்,
💜சொர்க்கம்,
💜 நரகம் பற்றியும்,
இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்"..?
சிறுமியின் புத்திசாலித்தனமான இந்த கேள்வியால்..,
தத்துவமேதைக்கு தலை தொங்கிப்போய்..,
வாயடைத்து போய்விட்டார்..!!
நம்மில் பலரும் இது போலத் தான்...
தனக்கு எல்லாம் தெரியும் என அகங்காரத்தோடு..
மற்றவர்களை மட்டம் தட்டுவார்கள்...!!
நிறைகுடம் ததும்பாது...!!
குறைகுடம் கூத்தாடும் என....
முன்னோர்கள் சொல்லியது இதையே...!!
எவரையும் குறைவாக எடை போடக்கூடாது...!!
தலைக்கனமும் கூடாது..!!
கற்றது கைமண் அளவு,..!!
கல்லாதது உலகளவு..!!
🌹🌹🌹🌹🌹🌹
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற தமிழ் மடலை அணுகவும் !
No comments