மனம் இருந்தால் போதும் ...... ( சிறுகதை )
மனம் இருந்தால் போதும் ..... ( சிறுகதை )
ஒரு பிச்சைக்காரர் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டார். இளகிய மனம் படைத்த பெரியவர் அந்தப் பிச்சைக்காரருக்கு பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரரிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரரின் முகத்திலோ ஓர் ஒளி...!
ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பி என்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றார் .
பணமோ, காசோ கொடுப்பது மட்டுமல்ல. இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார்...! எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை... மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம். அன்பு மட்டுமே மிகச் சிறந்த ஆயுதம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை அனுதினமும் பெற தமிழ் மடலை அணுகவும் !
No comments