தேநீர் தான் கோப்பை அல்ல ! ....... ( சிறுகதை )
தேநீர் தான் கோப்பை அல்ல ! ....... ( சிறுகதை )
ஒருமுறை முன்னாள் மாணவர்கள் சிலர் தங்கள் பேராசிரியரை பார்க்க வருகிறார்கள். நாங்கள் படித்து முடித்துவிட்டு நல்ல வேலையில் தொழிலில் இருக்கிறோம். இருப்பினும் பல வகையில் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். எதிலும் முழுமையான நிம்மதியும் சந்தோஷமும் இல்லை. மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று தங்கள் பேராசிரியரிடம் சொல்லி ஆலோசனை கேட்டனர்.
அப்போது அவர், முதலில் நாம் தேநீர் அருந்தி விட்டு பேசுவோம் என்று கூறினார். சூடான தேநீர் ஒரு பாத்திரத்தில் வந்தது.
தங்கம், வெள்ளி, கற்கள் பதித்த கோப்பைகள் விலை உயர்ந்த கண்ணாடி கோப்பைகள் பீங்கான் கோப்பைகள் மண் குவளை உள்ளிட்ட விதவிதமான தேனீர் கோப்பைகளும் கொண்டுவரப்பட்டது. அவரவருக்கு விருப்பமான கோப்பையை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.
எல்லோரும் எடுத்த பிறகு மண் குவளை மட்டும் மிச்சம் இருந்தது. அதில் தனக்கான தேநீரை ஊற்றிக் குடித்தவாறே பேராசிரியர் சொன்னார்.
*கோப்பை எதுவாக இருந்தாலும் அருந்தும் தேநீர் ஒன்றுதான்.*
உண்மையில் நம் அனைவருக்கும் இப்போது தேவையானது தேனீர் தான் கோப்பை அல்ல. இருந்தாலும் எல்லோரும் மிகச்சிறந்ததை, விலை உயர்ந்த கோப்பையை தான் எடுத்தீர்கள். மற்றவர்கள் எந்த கோப்பையை எடுத்திருக்கிறார்கள் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.
இப்போது வாழ்க்கை என்பதை தேநீர் என்று வைத்துக் கொண்டால் வேலை அந்தஸ்து கௌரவம் வசதி வாய்ப்புகள் ஆடம்பரம் எல்லாம் கோப்பைகள் போன்றது.
சில நேரங்களில் நாம் கோப்பையின் மீது கவனம் வைத்து தேநீரின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.
இதுதான் உங்கள் மன அழுத்தத்துக்கு காரணம் என்று கூறினார்.
நீதி : - ஆடம்பரத்தை பார்க்காமல் செய்யும் தொழிலே தெய்வமாக பார்த்தால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் !
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை எந்நாளும் பெற தமிழ் மடலை அணுகவும் !
No comments