வரலாற்றில் இன்று - Nov 12
வரலாற்றில் இன்று
12 நவம்பர் 2025-புதன்
===========================
1781 : நாகப்பட்டினம் கிழக்கிந்தியப் படையால் கைப்பற்றப்பட்டது.
1793 : பாரிஸ் நகரின் முதலாவது முதல்வர் சான்பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
1841: பிரிட்டனில் முதன் முதலில் யூதர்களுக்காக ஜூயூஸ் க்ரோனிக்கல் எனும் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.
1893 : பிரிட்டிஷ் -இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) இடையே எல்லைக்கோடு வரைய உடன்பாடு ஏற்பட்டது.
1905 : நார்வே மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது என தெரிவித்தனர்.
1918 : ஆஸ்திரியா குடியரசு நாடானது.
1927 : மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
1928 : வெஸ்ட்ரிஸ் என்ற பயணிகள் கப்பல் வர்ஜீனியாவில் மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்தனர்.
1938 : தபால் தொடர்பான அருங்காட்சியகம் முதன் முதலாக டெல்லியில் அமைக்கப்பட்டது.
சீனாவில் ஷாங்ஷூ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
1940 : இரண்டாம் உலகப் போர் :- காபோன் போர் முடிவுக்கு வந்தது.
பிரெஞ்சுப் படைகள் காபோன் லிப்ரவில் நகரைக் கைப்பற்றின.
1941 : இரண்டாம் உலகப்போர் :- செவஸ்டபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் :- பிரிட்டனின் வான்படை ஜெர்மனியின் திர்பிட்ஸ் போர்க்கப்பலை நார்வே அருகில் குண்டுகள் வீசி மூழ்கடித்தது.
1948 : டோக்கியோவில் பன்னாட்டு போர்க்குற்றவாளிகளின் நீதிமன்றம் 7 ஜப்பானிய ராணுவ அதிகாரிகளுக்கு இரண்டாம் உலகப்போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
1956 : சூயஸ் நெருக்கடி :- இஸ்ரேல் படைகள் காசாக் கரையில் ராஃபா என்ற இடத்தில் 111 பாலஸ்தீன அகதிகளை சுட்டுக்கொன்றனர்.
1963 : ஜப்பானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 164 பேர் உயிரிழந்தனர்.
1969 : வியட்நாம் போர் :- மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹெர்ஸ் வெளியிட்டார்.
1980 : நாசாவின் வாயேஜர்-1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 : கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
1990 : இளவரசர் அக்கி ஹிட்டோ ஜப்பானின் 125வது அரசராக முடிசூடினார்.
இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை டிம் பெர்னர்ஸ் - லீ அறிவித்தார்.
1991 : கிழக்கு திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனேஷிய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
கட்சித் தாவல் தடை சட்டம் செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1994 : இலங்கையின் 5 வது ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்வு செய்யப்பட்டார்.
1996 : சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.
1999 : துருக்கியின் வடமேற்கே இடம்பெற்ற 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 845 பேர் உயிரிழந்தனர்.
2001 : நியூயார்க் நகரில் டொமினிக்கன் நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு கூட்டணிப் படைகள் முன்னேறியதை அடுத்து காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றிலும் விலகின.
2011 : ஈரானில் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
2015 : பெய்ரூட் நகரில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2017 : ஈரானில் ஈராக் எல்லைப்பகுதியில் கெர்மான்சா மாகாணத்தில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 500 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
8,100 பேர் காயமடைந்தனர்.
No comments