Header Ads

வரலாற்றில் இன்று - Nov 14

                       வரலாற்றில் இன்று
                 14 நவம்பர் 2025-வெள்ளி
                ==========================



1380 : பிரான்ஸின் மன்னராக ஆறாம் சார்லஸ் 12 வயதில் முடிசூடினார்.

1579 : கிறிஸ்தவ சமய போதனை என்ற நூல் போர்ச்சுகீசிய யூதர் ஹென்ரிக்கே ஹென்ரிகஸ் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

1708 : கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது.

1751 : இரண்டாம் கர்நாடகப் போர்:- பிரிட்டன்-பிரான்சுக்கிடையே ஆற்காடு போர் முடிவுக்கு வந்தது.

1885 : செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.

1886 : ஜெர்மனியைச் சேர்ந்த பிரேட்ரிச் சொன்னேக்கென் என்பவர் முதல் தடவையாக காகித துளைக் கருவியை வடிவமைத்தார்.

1896 : பிரிட்டனில் மோட்டார் வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 13 கி.மீ.லிருந்து 14 கி.மீட்டருக்கு உயர்த்தப்பட்டது.

1918 : செக்கோஸ்லோவாக்கியா குடியரசானது.

1922 : பிபிசி தனது வானொலி சேவையை பிரிட்டனில் தொடங்கியது.

1940 : இரண்டாம் உலகப்போர் :- இங்கிலாந்தில் கோவெண்ட்ரி நகரம் ஜெர்மனியின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது. 
கோவெண்ட்ரி தேவாலயம் முற்றிலும் அழிந்தது.

1941 : இரண்டாம் உலகப் போர் :- விமானம் தாங்கி கப்பல் ஆர்க் ராயல் மூழ்கியது.

இரண்டாம் உலகப் போர் :- பெலரூஸில் ஜெர்மனிப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9 ஆயிரம் யூதர்களைக் கொன்றனர்.

1956 : ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.

1963 : ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி எனும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.

1964 : இந்தியாவில் நேருவின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.

1965 : வியட்நாம் போர் :- லா ட்ராங் எனும் இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.

1967 : அமெரிக்க இயற்பியலாளர் தியோடர் மைமான் உலகின் முதலாவது ரூபி லேசருக்கான காப்புரிமை பெற்றார்.

1969 : லிபியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன.

நாசாவின் அப்பல்லோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.

1970 : மேற்கு வர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்தனர்.

1973 : கிரேக்கத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

1975 : மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.

1978 : பிரான்ஸ் அப்ரோடைட் என்ற அணு ஆயுத சோதனையை நிகழ்த்தியது.

1979 : அமெரிக்காவில் உள்ள ஈரான் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

1990 : கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்கு பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

1996 : சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2001 : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஆப்கன்-வடக்கு கூட்டணிப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. 

2003 : 90377 செட்னா என்ற டிரான்ஸ்- நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.



இது போன்ற பயனுள்ள தகவல்களை அனுதினமும் பெற தமிழ் மடலை அணுகவும் !

No comments

Powered by Blogger.