Header Ads

வரலாற்றில் இன்று - Nov 9

                        வரலாற்றில் இன்று
                 09 நவம்பர் 2025-ஞாயிறு
        ==========================


1520 : ஸ்வீடன், ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறிஸ்டியன் மன்னருக்கு எதிராக செயல்பட்ட 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1720 : ஜெருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முஸ்லிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது.

1769 : பிரிட்டன், அயர்ஷயரில் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் முதன்முதல் 12 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

1793 : கிறிஸ்தவ மிஷனரி வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.

1799 : பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. 
நெப்போலியன் பிரான்ஸை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

1859 : பிரிட்டிஷ் ராணுவத்தில் கசையடி தண்டனை ஒழிக்கப்பட்டது.

1872 : பாஸ்டன் நகரில் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ பரவியதில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 
776 கட்டிடங்கள் அழிந்து 20 பேர் உயிரிழந்தனர்.

1887 : அமெரிக்கா ஹவாயின் பேர்ல் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.

1907 : குல்லினன் வைரம் இங்கிலாந்தின் ஏழாம் எட்வர்ட் மன்னருக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பரிசாக அளிக்கப்பட்டது.

1913 : மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு ஒன்பது மாத சிறை தண்டனை அடைந்தார்.

1914 : ஜெர்மனியின் எம்டன் கப்பல் கொக்கோஸ் தீவில் இடம்பெற்ற போரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1918 : ஜெர்மனி புரட்சியை அடுத்து இரண்டாம் வில்லியம் முடி துறந்தார்.
ஜெர்மனி குடியரசானது.

1921 : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1937 : இரண்டாம் சீன-ஜப்பான் போர் :- சீன ராணுவம் ஷாங்காய் நகரில் இருந்து வெளியேறின.

1938 : ஜெர்மனியில் ஹிட்லரின் யூதப் பகைமை கொள்கையின் ஒரு பகுதியாக 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 
25,000 பேர் கைது செய்யப்பட்டு நாஜி வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

1953 : கம்போடியா பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 : ஜப்பானில் மெய்க் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் யோகோஹாமா என்ற இடத்தில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 160 பேர் பலியானார்கள்.

1967 : நாசா அப்பல்லோ -4 ஆளில்லா விண்கலத்தை ஏவியது.

1989 : பனிப் போர் :- கம்யூனிஸக் கிழக்கு ஜெர்மனியில் பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

1990 : நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1991: பிலிப்பைன்ஸில் வீசிய புயலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள்.

1994 : டார்ம்ஸ்டாடியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

2000 : உத்ராஞ்சல் மாநிலம் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

2005 : ஜோர்டானின் அமான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கஜகஸ்தான், பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

2012 : கொழும்பு, வெலிக்கடை சிறையில் காவலர்கள் மட்டும் கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு மியான்மரில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
80 பேர் காயமடைந்தனர்.

2016 : டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.