Header Ads

இரண்டாம் உலகப்போர்......(சிறுகதை)

இரண்டாம் உலகப்போர் ....(சிறுகதை)



இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலம்.
 ஜெர்மனியில் ஒரு சிறை முகாம். மேற்கொண்டு கைதாகிறவர்களை அடைத்து வைப்பதற்கு இடம் போதாத சூழ்நிலை.
கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சிறை அதிகாரிகள் திட்டமிட்டார்கள். ஒவ்வொரு கைதிக்கும் ஓர் எண் கொடுக்கப்பட்டது. தினந்தோறும் குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த எண்களுக்கு உரியவர்கள் சுட்டு முறையில் சில எண்கள் வீழ்த்தப்பட்டார்கள்.

ஒரு நாள் அப்படி அழைக்கப்பட்ட ஒரு கைதிக்கு சாக விருப்பமே இல்லை.அவன் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்,கைதாகியிருந்த ஒரு பாதிரியார். அவனை நெருங்கிப் புன்னகையுடன் தோளில் தட்டிக் கொடுத்தார்.
"சகோதரனே நீ வாழ விரும்புகிறாய்.வாழு அந்த எண்ணுக்கு உரியவனாக நான் மரணமேடைக்குப் போகிறேன்” என்றார்.
கிடைத்த வாய்ப்பையும், முன்வந்த நபரையும் பயன்படுத்திக்கொள்ள அந்தக் கைதி துணிந்தான். அன்று மரண தண்டனையிலிருந்து தப்பினான்.

யுத்தம் முடிந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகள் அவனும் உயிரோடிருந்தான். ஆனால், யாரோ போட்ட பிச்சைதான் தன் உயிர் என்பதை நினைத்து நினைத்து அவன் வெட்கி வேதனைப்படாத நாளில்லை. மரண மேடைக்கு கம்பீரமாகப் போன பாதிரியாரின் சந்தோஷம், உயிரோடிருந்தும் இறுதிவரை அவனுக்குக் கிட்டவில்லை.

தன்னையே இன்னொருவனுக்காக விட்டுக்கொடுத்த பாதிரியார் ஆயுள்ரீதியாக குறைவாகவே வாழ்ந்தார்.ஆனால், முழுமையாக வாழ்ந்துவிட்டார். ஆயுளை நீட்டித்துக்கொண்டும், அவன் குறையாக வாழ்ந்து முடிந்தான்.
காண்பவரிடமெல்லாம் சலுகையை எதிர்பார்த்திருப்பது மேன்மையல்ல.

இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற  தமிழ் மடலை அணுகவும் !

No comments

Powered by Blogger.