பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10 / 11 / 2025 - திங்கட்கிழமை
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - NOV 10
திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter : இடனறிதல் Knowing the Place :
குறள் 498:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையா
ஊக்கம் அழிந்து விடும்.
English Couplet 498:
If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.
மு.வரதராசன் விளக்கம்:
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
Couplet Explanation:
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
பொன்மொழி :
1) சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்
2) இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன
பழமொழி :
🌟 A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
பொது அறிவு :
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை : - நவம்பர் 7
முக்கியச் செய்திகள் : 10.11.2025 - திங்கள்
<
மாநிலச் செய்தி:
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டம் - முதல்வர் திருச்சியில் இன்று தொடங்கிவைக்கிறார்
உள்நாட்டுச்செய்தி:
பிஹாரில் 65.08% வாக்குப்பதிவு: மாநில வரலாற்றில் முதல்முறை
உலகச்செய்தி:
" ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்
விளையாட்டுச்செய்தி:
91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்
School Morning Prayer Activities in English Today :
Important News: 10.11.2025 -Monday
State News:
'Anbucholai' scheme for the well-being of senior citizens - CM to launch in Trichy today
National News:
65.08% voting in Bihar: First time in state history
World News:
New law in Denmark to prevent AI fake videos
Sports News:
Rahul from Chennai becomes 91st Grand Master
No comments