வரலாற்றில் இன்று - Nov 10
வரலாற்றில் இன்று
10 நவம்பர் 2025-திங்கள்
===========================
1659 : பிரதாப்கர் போரில் மராட்டியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல்கானைக் கொன்றார்.
1674 : மூன்றாவது ஆங்கிலேய டச்சுப் போர் :- நெதர்லாந்து கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை இங்கிலாந்துக்கு கொடுத்தது.
1847 : 110 பேருடன் சென்ற ஸ்டீபன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.
1849 : பிரிட்டனில் விபத்து இன்சூரன்ஸ் முதன்முதல் ரயில்வே பேசஞ்சர் அஷ்யூரன்ஸ் கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1885 : ஜெர்மன் பொறியாளர் காட்லீப் டைம்லர் உலகின் முதல் மோட்டார் சைக்கிளை வெளியிட்டார்.
1905 : ரஷ்யாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன.
1918 : யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற உள்ளூர் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
அடுத்த இரு நாட்களில் கலவரம் சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களுக்கும் பரவியது.
1928 : ஹிரா ஹிட்டோ ஜப்பானின் 124 வது மன்னரானார்.
1940 : ருமேனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும்
அதிகமானோர் உயிரிழந்தனர்.
1944 : அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் மானுஸ் தீவில் வெடித்ததில் 432 பேர் உயிரிழந்தனர்.
371 பேர் காயமடைந்தனர்.
1964 : ஆஸ்திரேலியா கட்டாய ராணுவப் பயிற்சி திட்டத்தை அமல்படுத்தியது.
1970 : சோவியத்தின் லூனா-17 விண்கப்பல் சந்திரனுக்கு லூனாகோட் எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
வியட்நாம் போர் :- முதல் தடவையாக 5 ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படைகளின் உயிரிழப்புகள் இல்லாத வாரமாக இருந்தது.
1971 : கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் நோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று 9 விமானங்களை அழித்தன.
30 பேர் காயமடைந்தனர்.
1972 : பர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது.
கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1975 : 729 அடி நீள எட்மண்ட் பிட்செரால்ஸ் என்ற சரக்கு கப்பல் புயலில் சிக்கி சுப்ரீயர் ஏரியில் மூழ்கியதில் அதில் இருந்த 29 மாலுமிகளும் இறந்தனர்.
1979 : வெடிமருந்துகளையும் நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச்சென்ற 106 பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்கு ரயில் ஒன்று ஒன்டாரியோவில் தடம் புரண்டு வெடித்தது.
வட அமெரிக்காவின் மிகப்பெரும் மக்கள் இடம் பெயர்வு ஏற்பட்டது.
1983 : விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
1989 : ஜெர்மனியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.
பல்கேரியாவின் நீண்டகால அதிபர் டோடர் ஷிவ்கோவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு பீட்டர் மிலடெனோவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
1990 : இந்தியப் பிரதமராக சந்திரசேகர் பதவி ஏற்றார்.
1993 : யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை ராணுவ கடற்படை கூட்டுத் தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 : நைஜீரியாவில் சுற்றுச்சூழல் ஆதரவாளர் கென் சரோ விவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1999 : பாகிஸ்தானில் தேசத்துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
2006 : தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2008 : செவ்வாய்க் கோளில் தரை இறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்ஸ் விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
2012 : இலங்கை, கொழும்பு சிறையில் நடந்த மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற தமிழ் மடலை அணுகவும் .
No comments