வரலாற்றில் இன்று - Nov 13
வரலாற்றில் இன்று
13 நவம்பர் 2025-வியாழன்
============================
1002 : இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டென் பழங்குடிகளை கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் தெல்ரெட் உத்தரவிட்டார்.
1093 : ஆல்வின்க் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் ஸ்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம் அவரது மகன் எட்வர்ட் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
1775 : அமெரிக்கப் புரட்சிப் போர் :- ரிச்சர்ட் மொண்ட்கோமரி தலைமையிலான புரட்சிப் படையினர் மாண்ட்ரீல் நகரைக் கைப்பற்றினர்.
1795 : ஆங்கிலேயப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1816 : பாஸ்டன் நகரில் அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி திறக்கப்பட்டது.
1887 : நவம்பர் 11 ல் சிகாகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
1904 : ரஷ்ய ஆதிக்கத்தை எதிர்த்து போலந்தில் நடந்தக் கலவரத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
1914 : பர்பர் இனத்தவர்கள் மொராக்கோவில் எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.
1927 : நியூஜெர்ஸியையும் நியூயார்க் நகரையும் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
1941 : இரண்டாம் உலகப் போர் :- விமானந்தாங்கிக் கப்பல் ஆர்க் ராயல் ஜெர்மனியின் யூ-81 கப்பலினால் தாக்கப்பட்டது.
அடுத்த நாள் இது மூழ்கியது.
1947 : ரஷ்யாவைச் சேர்ந்த மிக்கைல் கலாஷ்னிக்கோவ் என்பவர் ஏ.கே -47 துப்பாக்கியை வடிவமைத்தார்.
1957 : கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
1965 : அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமஸில் மூழ்கியதில் 90 பேர் உயிரிழந்தனர்.
1970 : கிழக்கு பாகிஸ்தானில் ( இப்போது பங்களாதேஷ் ) கடும் புயல் மற்றும் சுனாமியால் 5 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.
1985 : கொலம்பியாவில் நெவாடோ டெல்ரூஸ் என்ற எரிமலை வெடித்து ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரா நகரம் அழிந்தது. 23,000 பேர் உயிரிழந்தனர்.
1989 : இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 : உலக வலைப்பின்னல் ஆரம்பிக்கப்பட்டது.
1993 : யாழ்ப்பாணம், புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
113 ஆண்டுகளாக பம்பாயில் இருந்து வெளிவந்த இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி எனும் ஆங்கில வார இதழ் நிறுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை ராணுவக் கடற்படை கூட்டுத் தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல டாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.
மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
1994 : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஸ்வீடன் மக்கள் முடிவு செய்தனர்.
1995 : சவுதி அரேபியா ரியாத் நகரில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.
2012 : முழுமையான சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும் நிகழ்ந்தது.
2013 : ஹவாய் ஓரினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.
2015 : பாரிஸில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை அனுதினமும் பெற தமிழ் மடலை அணுகவும் !
No comments