வரலாற்றில் இன்று - Nov 15
வரலாற்றில் இன்று
15 நவம்பர் 2025-சனி
===========================
1791 : முதலாவது அமெரிக்க கத்தோலிக்கக் கல்லூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.
1837 : சர்.ஐசக் பிட்மனின் சுருக்கெழுத்து முறை முதன் முதலில் வெளியானது.
1896 : தி போனோஸ்கிராப் எனும் முதல் சினிமா பத்திரிக்கை நியூயார்க்கில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.
1901 : நியூயார்க்கில் மில்டர் ரீஸ் ஹட்சின்சன் என்பவர் காது கேட்கும் கருவிக்கு காப்புரிமம் பெற்றார்.
1904 : அமெரிக்காவைச் சேர்ந்த கிங் காம்ப் ஜில்லட் ரேஸர் பிளேடுக்கு காப்புரிமை பெற்றார்.
1920 : பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார்.
1922 : பிரிட்டனில் முதல் முதல் தேர்தல் முடிவுகள் பிபிசி மூலம் ஒலிபரப்பப்பட்டது.
ஈக்வடார், குயாகுவில் நகரில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1926 : என்பிசி வானொலி நெட்வொர்க் 24 நிலையங்களுடன் சேவையைத் தொடங்கியது.
1930 : பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் முதன் முதலில் வண்ண விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது.
1933 : தாய்லாந்தில் முதல்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1936 : ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே பெர்லினில் நடந்த கால்பந்து போட்டி முதன் முதலாக நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
1943 : நாஜி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிட்டது.
1948 : இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
1949 : நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் மகாத்மா காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர்.
1969 : வியட்நாம் போர் :- வியட்நாம் போரை எதிர்த்து வாஷிங்டனில் 2,50,000 பேர் வரை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1971 : இன்டெல் நிறுவனம் உலகின் முதல் வணிக ஒற்றை சிப் நுண்செயலியான 4004 ஐ வெளியிட்டது.
1978 : தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் உயிரிழந்தனர்.
2000 : ஜார்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
அங்கோலா, ருவாண்டாவில் விமானம் ஒன்று விழுந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
2006 : அல்-ஜசீரா ஆங்கில செய்தி சேனல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 : வங்க தேசத்தில் வீசிய சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2012 : ஜி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.
2018 : கஜா புயல் தமிழகத்தை குறிப்பாக டெல்டா பகுதிகளில் பெறும் சேதத்தை ஏற்படுத்தியது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற தமிழ் மடலை அணுகவும் !
No comments